கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பீளமேடு பகுதியில் உள்ள செங்காளியப்பன் நகர் (வார்டு எண். 38) அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



இன்று அதிகாலை மேம்பாலத்தை ரயில் கடந்து செல்லும்பொழுது அதிர்வு தாங்காமல் கேபிள் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.



'அதிகாலை நேரத்தில் கம்பிகள் அறுந்து விழுந்ததால் விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், அறுந்து விழுந்த கம்பிகள் மின்கம்பிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் பொதுமக்கள் சிலர், அவற்றை சோதித்து, சாலையோரமாக ஒதுக்கிவைத்தனர்' என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் திரு. சண்முகம்.



காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இப்பகுதியை கடந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. 

பல மணி நேரமாக கீழே விழுந்த கேபிள் கம்பிகள் அகற்றப்படாத நிலையில், தற்போது இப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கேபிள் கம்பிகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...