கிராமத்தில் சுற்றித் திரிந்த கழுதைப்புலிக்கு மருத்துவர்கள் சிகிச்சை

ஈரோடு, நவம்பர் 6: பவானிசாகர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றியநிலையில் சுற்றித்திரிந்த கழுதைப்புலிக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழுதைப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழுதைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில், விரட்டியடிக்கப்பட்ட கழுதைப்புலி மீண்டும் சோர்வுடன் சுற்றித்திரிந்தது. இதனால், பவானிசாகர் வனச்சரகர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த கழுதைப்புலியை பிடித்து கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு வந்தனர்.



பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன் உடல்நலம் குன்றிய கழுதைப்புலிக்கு சிகிச்சை அளித்தார். இதுகுறித்து அவர். கூறியதாவது : இந்த கழுதைப்புலிக்கு சுமார் 10 வயது இருக்கும். இது ஆண் கழுதைப்புலி. புலியின் பற்கள் சேதமடைந்ததால் நீண்டநாள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும், காதில் புழுக்கள் பிடித்துள்ளதால் சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.



மேலும் அவர் கூறுகையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த கழுதைப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கி கண்காணித்து வருகின்றோம். மாமிசம் மற்றும் செர்லாக் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் இதுபோன்ற கழுதைப்புலிகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கழுதைப் புலிகள் பெரும்பாலும் இங்கு காணப்படுவதில்லை. கழுதைப்புலிக்கு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...