கோவை, நவம்பர் 6: கோவையில் நடக்கும் பல்வேறு முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி செயலியில், தற்போது, உயர்கல்வி தொடர்பான செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதற்கென ”EduCity” என்ற தனி பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் உயர்கல்வி தொடர்பான செய்திகளை தலைமையாசிரியர் மற்றும் தலைமை நிரூபர் அமுதா கண்ணன் வழங்க இருக்கிறார்.
கோவையின் பிரபல ஹிந்து நாளிதழின் முன்னாள் நிரூபராக பணியாற்றிய அவர், உயர்கல்விக் குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக வழங்கி வந்தார். தமிழகத்தில் உயர்கல்விக்கு பெயர்போன கோவையில், 7 பல்கலைக்கழகங்களும், ஏராளமான கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன . இதனால், உயர்கல்வியைப் பயில்வதற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமானோர் கோவைக்கு வருகின்றனர்.
இந்த நிலையில், இம்மாதம் 13ம் தேதி முதல் நமது சிம்ப்ளிசிட்டி செயலியில், கல்வி நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் கொள்கைகள் குறித்தும் விரிவாக பதிவிடப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கை மாணவர்களுக்கும், கல்வி குறித்த நெறியாளர்களுக்கும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.