நவம்பர் 5: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதிகளை சுற்றிப்பார்க்கும் வகையில் இன்று வண்ணப்பூரணி சுற்றுலாத் திட்டம் துவங்கப்பட்டது.
தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி இயற்கை எழில்கொஞ்சும் பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள இங்கு சுற்றுலாத் துறை, வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்புடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்த சுற்றுலாத் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

வன உயிரின சரணாலயமாக இருந்த இந்த வனப்பகுதி புலிகள் காப்பகமாக கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின் அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணபூரணி வனச்சுற்றுலா திட்டத்தின் மூலம் சுற்றுலா பயணிகள் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை எளிதில் பார்க்கும் வகையில் வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹாடா செல்லும் சாலையில் உள்ள மாயாற்றுப்படுகை, ஆதிகருவண்ணராயர் கோயில் மற்றும் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகியவற்றைப் பார்க்கும் வகையில், 23 கிலோமீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனச்சாலையிலும், தாளவாடி வனச்சரகத்தில் கொங்கள்ளி வனப்பகுதியில் உள்ள எத்துகட்டி முதல் கண்காணிப்பு கோபுரம் வரையிலும், வனசுற்றுலா திட்டத்தில் பயணிகளை அழைத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது துவங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சோதனை முயற்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பின் வரும் காலங்களில் இது மேலும் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
அண்மையில், பிற மூன்று புலிகள் காப்பகத்தில் இத்திட்டம் துவங்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்கையில் சத்தியமங்கலம் இதற்குச் சிறந்த தேர்வாக இருந்தது. இங்கு ஆசிய யானைகள், கரடிகள், மான், காட்டெருமை போன்ற பெரிய பாலூட்டிகளும் இந்தியச் சிறுத்தைகள் மற்றும் புலிகள் ஆகியவை அதிகளவில் இங்குக் காணப்படுவதால் இது சிறந்த சுற்றுலாத் தளமாகவும் விளங்கும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலத்திலுள்ள பந்திபூர் புலிகள் சரணாலயம் மற்றும் கேரளாவில் உள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்துடன் இந்த சத்தியமங்கலம் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பெரிய அளவிலான சரணாலயம் வனவிலங்குகளில் கடைசி சரணாலயமாக இருக்கலாம் என வன விலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.