கோவை, நவம்பர் 4: ரேஷன் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வரும் 6-ம் தேதி அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் திரு. வெ.நா.பழனியப்பன் தலைமையிலும், மாவட்ட பொறுப்பாளர் திரு.நா.கார்த்திக் முன்னிலையிலும் கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதுதான் பொது விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம். தற்போதைய மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு பணிந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்பு கொண்ட மாநில அரசு இன்றைக்கு திடீரென்று சர்க்கரை விலையை பல மடங்கு உயர்த்தி, அப்பாவி மக்களுக்கு தாங்க முடியாத பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து வரும் 6-ந்தேதி, அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி எடுத்த தன்னிச்சையான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பேரிடரை கண்டித்து அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 8 ந்தேதி நாடு தழுவிய கருப்பு சட்டை ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர் முழுவதும் 2 ஆயிரம் தெருவிளக்குகள் எரியாததால், பல தெருக்கள், சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளைகள் நடைபெறுகின்றது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாத்தால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மாநகராட்சிக்குட்பட்ட 55-வது வட்டம் ஜெயசிம்மபுரத்தில் உள்ள நகர்நல மையம் மக்களுக்கு சேவை அளிக்காமல் பூட்டப்பட்டுள்ளது, இதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதாகவும், கோவையின் முக்கிய நதியான நொய்யல் ஆறு, மற்றும் சங்கனூர் ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் புதர்கள் மண்டி கிடக்கின்றது, இவற்றை அகற்ற வேண்டும். பழைய சுங்கம் வாலாங்குளத்திற்கு வரக்கூடிய நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக திறந்துவிடவேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.