கோவையில் 3 பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் - கோவை அரசு மருத்துவமனையின் தலைவர் தகவல்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்குக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோவை அரசு மருத்துவமனை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கிடும் போது, அதிகளவு நோயாளிகள் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட அண்டை மாவட்டத்தினருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 50 சதவீதத்தினர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.

டெங்கு காய்ச்சலானது, ஆரம்ப நிலையைக் கண்டறிந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் விரைவில் குணப்படுத்த முடியும். நோய் முற்றினால்,சிகிச்சை அளிப்பது கடினமானது. சுற்றுப்புறம் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் டெங்கு ஒழிக்கும் பணியில் ஈடுபடும் மாநகராட்சி, சுகாதாரமற்ற பகுதிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறது. தற்போது, டெங்கு அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மாநகராட்சி டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...