மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் - தே.மு.தி.க.

கோவை, நவம்பர் 4: கோவையில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், "எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மூடப்பட்ட அரசு மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தாமதமாகும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்", என்றார்.



இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகக் கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...