கோவை, நவம்பர்.3: கோவையில் லஞ்சம் வாங்கிய இரண்டு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிபவர் சின்னராஜ். இவரும் தலைமை ஏட்டு கனகராஜ் என்பவரும் நேற்று இரவு கள்ளப்பாளையம் பிரிவு அருகே வாகனத்தனிக்கை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி லஞ்சம் பெற்றனர்.
இவர்கள் லஞ்சம் வாங்குவதை அவ்வழியாக சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி பார்த்தார்.
உடனடியாக இருவரிடமும் விசாரித்ததில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, லஞ்சப்புகாரில் சிக்கிய இரண்டு போலீசாரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.