நவம்பர் 3 : வடகிழக்கு பருவமழையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அவர், நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அடையாறு மண்டலம், வார்டு-173, கிரீன்வேஸ் சாலை, கேசவபுரத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் சாலையை சீர்செய்யும் பணியினைப் பார்வையிட்டு, அங்குள்ள அம்மா உணவகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கினார்.

அடுத்ததாக, தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சாலை, பார்க் ஹோட்டல் அருகில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்பு மூலம் மழைநீர் வடிகால்களில் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு, சாலையில் உள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றி தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டுமெனவும், சிந்தாதரிப்பேட்டையில் உள்ள பொது நிவாரண சமையல் கூடத்தினை பார்வையிட்டு அங்கு நிவாரண முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தயாராகி வரும் உணவினை பரிசோதித்து, பொதுமக்களுக்குத் தரமான உணவினை தொடர்ந்து வழங்கிட வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், அவர் பேசுகையில், நேற்று மழை தொடர்ந்து கனமழையாகப் பெய்ததனால், உடனடியாக மோட்டார் பம்பைப் பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால், தற்பொழுது மழைநீர் தேங்கிய இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கால்வாய்களில் தூர்வாரும் மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்றது. தற்பொழுது கால்வாயில் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றும் பணி தேவைப்படும் இடங்களில் நடைபெறுகிறது.

வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டது. அதில், 140 நபர்கள் தங்கியிருந்த நிலையில், தற்பொழுது அனைவரும் அவர்களின் இல்லங்களுக்குத் திரும்பி விட்டனர். 3,250 நபர்களுக்குக் காலை மற்றும் மதிய உணவுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் 13 சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்குப் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, சென்னை வானிலை மைய அறிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழையை எளிதில் சமாளித்திட பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.