ஆனந்த சங்கம் அமைப்பு சார்பில் யோகா குறித்த புத்தகம் மற்றும் குறுந்தகடு நாளை வெளியீடு

கோவை, நவம்பர் 3 : கோவையில் ஆனந்த சங்கம் அமைப்பு சார்பில் யோகா குறித்த புத்தகம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆனந்த சங்கம் யோகா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில், சுவாமி பரமஹம்ச யோகானந்தரின் நேரடி சீடர் கிரியானந்தாவின் குறிப்புகள் கொண்ட புத்தக வெளியீடு கோவையில் நாளை நடக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. 

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, ஆனந்த சங்க அமைப்பானது, இந்தியாவில் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தனர் .உலகம் முழுவதும் அரை மில்லியன் சீடர்கள் இவ்வமைப்பில் உள்ளதாகவும், இந்தியாவில் இந்த அமைப்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு, தற்போது 20,000 பேர் உள்ளதாகத் தெரிவித்தனர்.



மேலும், தற்போது கிரியானந்த சீடர்களான நயசாமி ஜோதிஷ் மற்றும் தேவி கிரியை, யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினர். நாளை நடைபெறும் ஆத்மா ஆரோக்கியத்திற்கான உறுதி மொழிகள் என்ற புத்தகம் தமிழிலும், மை ஹார்ட் ரிமம்பர்ஸ் என்ற 2 புத்தகங்கள் நாளை வெளியிடப்படும் என்றனர். மேலும், 26-வது சர்வதேச திரைப்பட விழாவில் 17 விருதுகள் குவித்த “தி ஆன்சர்” யோகா குறித்த திரைப்பட குறுந்தகடு முதன்முறையாகக் கோவை - அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.அரங்கில் நாளை வெளியிடப்படும். என்றனர்.

இந்த நிகழ்ச்சியில், சி.பி.ஐ.முன்னாள் இயக்குநர் திரு. கார்த்திகேயன் கலந்து கொள்ள உள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...