நொய்யல் மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு மருத்துவ ஆதரவு சேவையை வழங்கிய ஆர்த்தோ-ஒன்

கோவை, நவம்பர் 2 : கோவையில் நடைபெற்ற நொய்யல் அரை மாரத்தான் நிகழ்வில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஆர்த்தோ-ஒன் மருத்துவ ஆதரவு சேவையை வழங்கியது. 

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளை, குறிப்பாக நொய்யல் ஆற்றை மாசில்லாமல் பாதுகாப்பது மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில், 1000-க்கும் மேற்பட்டோர் அதிக உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிக நவீன மருத்துவ கவனிப்பு சேவையையும், சிகிச்சையையும் வழங்குவதில் பிரபலமாக அறியப்படும் ஆர்த்தோ-ஒன், இதில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓட்டப்பந்தய வழித்தடத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவியையும், சிகிச்சையையும் வழங்கியதுடன் மாரத்தான் நிகழ்வுக்கு முந்தைய தயாராகுதல் மற்றும் நிகழ்வுக்கு பிந்தைய தளர்வாக்கல் ஆலோசனை சேவையையும் வழங்கியது. 

இந்நிகழ்ச்சியின் போது ஆர்த்தோ-ஒன் நிறுவனர் டாக்டர். டேவிட் ஏ. ராஜன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பையும், பங்கேற்பையும் பெற்று வருகின்றன. ஒரு சிறந்த நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் வந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த நபர்கள் இந்நிகழ்வில் அதிக உற்சாகத்தோடு பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் வெளிப்படுத்திய விளையாட்டின் மீதான ஆர்வமும், தாக்கமும் பெரிதும் பாராட்டுக்குரியது," 

மேலும், இந்த மாரத்தான் நிகழ்வில் ஒரு அங்கமாக பங்கேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்தகைய நிகழ்வுகளின் பங்கேற்பாளர்கள் சிரமமில்லாமல் இலக்கைச் சென்றடைவதற்கு நாங்கள் உதவ முடியும் என்பதால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளில் எமது சேவையை வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். என்றார். 

ஆர்த்தோ-ஒன் குறித்து: டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தால் ஆர்த்தோ பெட்டிக்ஸ் (எலும்பு முடநீக்கவியல்) சிறப்புத்துறையின் கீழ் அகில இந்திய லைஃப் ஸ்டைல் மருத்துவமனை மற்றும் கிளினிக் தரவரிசை சர்வே நடத்தப்பட்டது. அதில், 2017-ல் தென்னிந்தியாவிலுள்ள முதன்மையான 10 மருத்துவமனைகளுள் ஒன்றாக ஆர்த்தோ-ஒன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...