கோவை, அக்டோபர் 31: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையை பெறத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சியற்றவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும் முதுநிலைபட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த உதவித் தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களின் சுய உறுதிமொழி ஆவணத்தை வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவேட்டை நகலுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 31.12.2017 வரை வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பம் அளித்தவர்கள் இதுநாள் வரை சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் அலுவலகத்தில் நேரில் வந்து சமர்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை www.employment.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்காதவர்களுக்கு உதவித்தொகைத் தொடர்ந்து வழங்க இயலாது. எனவே, உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணத்தை தவறாது கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.