விமான நிலைய விரிவாக்கத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எஸ்.ஐ.இ.எம்.ஏ நன்றி

கோவை, அக்டோபர் 30: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அதன் தலைவர் திரு.கே.கே. ராஜன் செய்தியாளர்களிடம் இன்றுபேசுகையில், கோவை மாநகரின் நீண்ட நாள் தேவையான விமானநிலைய விரிவாக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவு பெறாத நிலையில் இருந்து வந்தது. இது குறித்து சீமா மற்ற சகோதர சங்கங்களுடன் இணைந்து பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் அனுப்பியுள்ளது..மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளோம். 

தற்போது, கோவை மக்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம், விமானநிலைய விரிவாக்கத்திற்கு மாநில அரசு விரைவு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

கடந்த வாரம் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், கோவை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்து அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் விவாதித்து விரிவாக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைகளை எடுத்து வரும் முதலமைச்சருக்கு சீமா சங்கத்தின் சார்பாகவும், கோவை மக்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

முதலமைச்சரின் ஆலோசனையினைத் தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்த ஒரு உயர்நிலை குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். 

விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், தற்போது, செயல்பட்டு வரும் விமானங்களைவிட கூடுதலாக பல விமான சேவை பல ஊர்களுக்கு குறிப்பாக வெளிநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். இதனால், வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் வியாபார நோக்கில் கோவைக்கு நேரடியாக வந்து செல்ல ஏதுவாக இருக்கும். இதனால், கோவையின் பொருளாதாரம் உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும், மேலும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிவுற்று கோவை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக உருவெடுக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...