பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பார்வையற்ற இளைஞர் ஆட்சியரிடம் புகார்


அக்டோபர் 30: உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பார்வையற்ற இளைஞர் பத்ரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரன். இவருக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை வைக்க அனுமதி வழங்கிய மாநகராட்சி நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகையின் கீழ் கடை வைக்க 30 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, கடை அமைக்க உக்கடம் காவல் நிலையத்தில் தடையின்மை சான்று கேட்டு தொடந்து பல முறை அவர் மனு அளித்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பத்ரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடம் தடையின்மை சான்று வழங்க பணம் கேட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் கடை அமைக்க அனுமதி பெற்றுத்தருவதுடன், சம்மந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...