மனித கழிவுகளை ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

மனிதக் கழிவுகளை பம்பு செட் மூலம் ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றுவதாக மருத்துவர் உறுதியளித்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகம், செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை பம்பு செட் மூலம் குன்னூர் கிருஷ்ணாபுரம் உமரிகாட்டேஜ் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் வழியாக இரவு நேரத்தில் ஓடையில் கலக்கவிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நகரச் செயலாளர் இராமசாமி ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், முறையாக கழிவுகளை லாரிகள் மூலமாக அகற்றுவதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பம்புசெட்டு அகற்றப்பட்டது. பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...