பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30: பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும். முதியோர் ஓய்வூதியத் தொகையினை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாநகராட்சி, 37-வது வார்டு காமராஜ் நகர் பகுதியில் அரசுப் பள்ளியின் அருகிலேயே 1769 எண் கொண்ட மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வருவோர் குடித்துவிட்டு சாலையிலேயே அசுத்தம் செய்கின்றனர். இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், ஆதரவற்ற முதியோர்களுக்காக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவி முறையாக பயனாளர்களை சென்றடைவதில்லை. இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...