குன்னூர், வெலிங்டனில் 71-வது காலாற்படை தினம் கொண்டாட்டம்

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 71-வது ஆண்டு காலாற்படை தினம் கொண்டாடப்பட்டது.

கடந்த 1947-ம் ஆண்டு, அக்டோபர் 27-ம் தேதி முதல் காலாற்படையினர் ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு வருகின்றனர். நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாற்படை தினம் கொண்டாடப்படுகிறது.



இதன் ஒரு பகுதியாக காலாற்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.



இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, பயிற்சி ராணுவ வீரர், ராணுவ வீரர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், முன்னாள் பிரிகேடியர் அஜீத் சிங், எம்.ஆர்.சி கமாண்டென்ட் பிரிகேடியர் சங்வான் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர்.



இதனைத்தொடர்ந்து போரின் போது வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...