சுகாதாரச் சீர்கேட்டில் வார்டு எண்.22

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வார்டு எண்.22 க்குட்பட்ட காமராஜபுரம், நியூ ஸ்கீம் சாலை, குப்பை மற்றும் கழிவுகளால் நிரம்பிவழிகின்றது. மேலும், இப்பகுதியை அடுத்துள்ள தடாகம் லிங்க் சாலை சந்திப்பில், சாக்கடைக் கழிவுகள் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர்.



சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வரும் காமராஜபுரத்தில் வெறும் இரண்டு குப்பைத் தொட்டிகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் சீக்கிரமாக நிரம்பி விடுவதால் கழிவுகள் குப்பைத் தொட்டியின் அருகில் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகள் மழைநீரால் அடித்துச்செல்லப்பட்டு சாலைகளில் தேங்கி, சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி வருகின்றன.



'மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து இப்பகுதியை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனாலும், குப்பைகள் தேங்குவதற்கு காரணம் குப்பைத் தொட்டிப் பற்றாக்குறை. குப்பைத் தொட்டிகள் குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டால் குப்பைகள் சாலைகளுக்கு வர வாய்ப்பில்லை. மேலும், இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குப்பைத் தொட்டிக்கு மிக அருகில் உள்ள பொது இடத்தில் நிறுத்துவதோடு, அலட்சியமாக அதே இடத்தில் குப்பைகளையும், மது பாட்டில்களையும் வீசிச் செல்கின்றனர். இதனால் இந்த இடமே பெரும் குப்பை மேடாக மாறிவருகின்றது. முறையான அனுமதியில்லாமல் நிற்கும் வாகனங்களை அகற்றி, பொது இடத்தில் குப்பைகளை வீசுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் இப்பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர்.



காமராஜபுரத்தை ஒட்டியுள்ள மேட்டுபாளையம் சாலையில் அமைந்துள்ளது தடாகம் லிங்க் சாலை சந்திப்பு. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த சாலையில் உள்ள சாக்கடைகள் நிரம்பி, சாக்கடைக் கழிவுகள் சாலையில் தேங்கி, வாகன ஓட்டிகளையும் குடியிருப்பு வாசிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதுகுறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வருத்தப்படுகிறார்கள் இப்பகுதி மக்கள்.



சுமார் 24 வருடங்களாக இப்பகுதியில் வசிக்கும் திரு. K. சுவாமியப்பன் கூறியதாவது, 'சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால், மழை நாட்களில் நரகத்தில் இருப்பதைப் போல் இங்குள்ளவர்கள் உணர்கின்றனர். இடையர்பாளையத்திலிருந்து கொண்டு செல்லப்படும் கழிவு நீர் குழாயின் கொள்ளளவும், அதன் அமைப்பும் முறையாக திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியிலிருந்து கழிவு நீர் வெளியேற முடியாமல், பின்னோக்கி வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது. இதைத்தவிர கழிவு நீர் குழாயில் ஏற்படும் அடைப்புகள் சாதாரண நாட்களிலும் பெரும் சிரமத்தை உருவாக்குகிறது. இந்நிலை தொடர்ந்தால் இங்கு வசிக்கும் மக்களுக்கு உயிரைக்கொல்லும் நோய் தொற்றுகள் உருவாக வாய்ப்புள்ளதாக' எச்சரித்தார்.

மேலும், தடாகம் லிங்க் சாலை சந்திப்பில் 20 அடி ஆழமுள்ள குழி ஒன்று, மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சென்ற வாரம், இந்த குழியில் தவறி விழுந்த 10 வயது சிறுவனை இப்பகுதி மக்கள் மீட்டு, பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



தூய்மை பாரதம், ஸ்மார்ட் சிட்டி, டெங்கு ஒழிப்பு போன்ற பணிகளுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான சுழலை உருவாக்கித்தர வேண்டும்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...