அடுத்த ஆண்டு முதல் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு - அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு


கோவை, அக்டோபர் 28: வரும் ஜனவரி மாதம் முதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எப், ஏ.டி.பி  உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் போது, வரும் ஜனவரி முதல் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம்  கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பான கட்டண பட்டியலையும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வெளியிட்டனர். 



இந்த புதிய கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் ஜனவரி முதல் இந்த புதிய கட்டணத்தின்படி ஆட்டோ கட்டணம் வசூல் செய்வது என முடிவு செய்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களின் வரவால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், டிசம்பர் 17-ம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மீண்டும் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...