முடிவுக்கு வரும் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் - விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் அளிக்க உரிமையாளர்கள் ஒப்புதல் ?


கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவைகளை விட்டு வேறு எங்கு செல்வது என தவித்து வந்த மக்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விரிவாக்க பணிக்காக எடுத்துக்கொள்ள இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதில் அவர்களுக்கு சாதாகமாகவே தீர்ப்பும் கிடைத்தது. இருப்பினும், அதனை மாநில அரசு அமல்படுத்தாமல், மிக குறைந்த அளவே நிவாரண தொகை மட்டுமே அளிப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 



இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது. இதனிடையே, நிலத்தை கையகப்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான குழு நியமிக்கப்பட்டு, நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை தொடர்ந்து, நடைபெற்று வந்தது. முதலில் சதுர அடிக்கு ரூ.600 அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொகையை இரட்டிப்பு செய்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதிலும், ஒரு சிலர், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருப்பதால், அங்குள்ள சந்தை மதிப்பிலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, ஒரு சதுர அடிக்கு ரு.1,500 எனவும், விவசாய நிலங்களுக்கு சதுர அடி ரூ.900 என்ற அடிப்படையில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.3.92 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை நில உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அரசு கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கவுதம் தாமோதரசாமி கூறுகையில், ஒரு சில உரிமையாளர்களின் நிலம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியே உள்ளது. நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம், அரசு அளிக்கும் தொகை குறித்து அனைவரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கையகப்படுத்தப்படும் இடங்களில் உள்ள சிறு தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு 5 கி.மீ தொலைவில் மாற்று இடத்தை வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வீடுகள் கட்டுவதற்கு பணமும் அளிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர். 

விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மொத்தம் 627.89 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேவைப்படுகிறது. இதில், 461.90 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் தனியார் வசம் உள்ளன. எஞ்சிய 134.32 ஏக்கர் நிலங்கள் புறம்போக்கு நிலங்களாகும். தனியார் வசம் உள்ள 65 சதவீத நிலங்களில் விவசாயம், குடியிருப்புகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் உள்ளன. 

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் வசிக்கும், இரண்டு கோடி மக்களுக்கான விமான நிலையமாக உள்ள  கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி கானல் நீராக இருந்து வந்தது. இந்த நிலையில், நில உரிமையாளர்களுடன் ஏற்பட்டுள்ள சமரசத்தால், விரைவில் விமான நிலையம் புத்துயுர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...