கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 52-வது வார்டுக்குட்பட்ட சாவித்திரி நகர் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அப்பகுதியில் குடிநீர் குழாய் அருகே தேங்கியுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பது குறித்தும், துப்புரவுப் பணியாளர்கள் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.