கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன்-தாரா தம்பதியினர். இவர்களது மகன்கள் ரஞ்சித்குமார் (22), அரவிந்த். ரஞ்சித் குமார் கோவைப்புதூர் பகுதியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்கி தொலைதூர கல்வி மூலம் பிபிஏ படித்து வந்தார்.
இந்த நிலையில், இவரது நண்பரான சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரது தங்க சங்கிலி காணாமல் போனது. இதில் ரஞ்சித் குமார் மீது சந்தேகம் கொண்ட அபுபக்கர், கடந்த 12ம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களான ஆதித்யா, தர்வேஷ், அசார், சபீக் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு ரஞ்சித்குமாரை தாக்கினர். இதில் ரஞ்சித் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்த ரஞ்சித்குமார் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூற, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கடந்த 14ம் தேதியன்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித் குமாருக்கு நேற்று (புத்தனன்று) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, முதற்கட்டமாக தாக்குதலில் தொடர்புடைய ஆதித்யா-வை மதுக்கரை போலீசார் கைது செய்திருந்தனர்.

தற்போது மாணவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ரஞ்சித்குமாரின் உயிரிழப்பு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.
இதனால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.