உதகை ரயில் நிலையத்தில் சுமார் 96 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த பழங்கால ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிகளுக்கு மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டது.
ஆங்கிலேயர் காலமான 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட x 37386 என்ற எண் கொண்ட ரயில் என்ஜின், 1921ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த என்ஜினை, எண்ணெய் மூலம் இயக்கும் தன்மைக்கு மாற்றுவதற்காக திருச்சியில் உள்ள கோல்டன் ராக் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள என்ஜினை, மக்களின் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில் முடிவு செய்தது. அதன்படி, அங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், உதகை ரயில்நிலையத்தில் மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல, 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.