கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் நேற்று (செவ்வாயன்று) இரவு 8 மணியளவில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை வழியாக சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த திருநங்கைகள் மூன்று பேர் சிவக்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, கத்தியைக் காட்டி மிரட்டி திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக, சிவக்குமார் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக கணபதி பகுதியைச் சேர்ந்த கல்பனா (30), மாயா (32), தனுஸ்ரீ (27) ஆகிய மூன்று திருநங்கைகளை கைது செய்து சிறையிலடைத்தனர்.
முன்னதாக, நேற்று (செவ்வாயன்று) காலை தங்களை சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட திருநங்கைகள் கல்பனா, மாயா, தனுஸ்ரீ ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.