வால்பாறைக்கு உட்பட்ட எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் புகுந்து இடையூறு செய்துவருவதைத் தொடர்ந்து கும்கி யானைகளைக் கொண்டு காட்டு யானைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சில வாரங்களாக காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து உடமைகள் மற்றும் ரேசன் கடை, பள்ளி சத்துணவு கூடங்கள், கடைகள் ஆகியவற்றை சூறையாடி வருகின்றன .
இந்நிலையில், நேற்று அதிகாலை வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட்டில் சாகுல் ஹமீது என்பவரின் டீ கடை மற்றும் அருகில் இருந்த சுரேஷ் என்பவரின் மளிகைக்கடை முன்புறத்தில் கதவு ஜன்னல்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் உள்ள ஈட்டியார் எஸ்டேட்டில் கலா மற்றும் சுப்பிரமணி ஆகியோர்களது வீடுகளின் ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை சேதம் செய்தன. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் யானைகள் செய்வதறியாது தடுமாறின .
அப்போது பாதுகாப்பின்றி திறந்த நிலையில் இருந்த கிணற்றுக்குள் குட்டி யானை எதிர்பாராத விதமாக விழுந்த நிலையில், தாய் யானையின் உதவியோடு குட்டி யானை மீட்கப்பட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.

இதேப் போல், திங்களன்று தாய்முடி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானைகள் சுப்பிரமணி, பாக்கியதாய், செல்வி, குருநாதன், முருகாத்தாள், லட்சுமி, சிவா, பாப்பம்மாள், மோகன், இசக்கியம்மாள், வெள்ளைத்துரை ஆகியோர்களது 11 வீடுகளை சேதப்படுத்தியது.
தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் நுழைந்து சேதப்படுத்தி வருவதால் அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் கும்கி யானைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.