மருத்துவமனைகளில் அனாதைகளாக விடப்பட்ட பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவையில் அனாதைகளாக விடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி வேலம்மாள் (40) என்ற பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கணவன் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டதோடு பெற்ற குழந்தையை அரசு மருத்துவமனையிலேயே விட்டுச்சென்றார்.

இந்த குழந்தையை அரசு மருத்துவமனை நிர்வாகம் பத்திரமாக மீட்டது. அதோடு, குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதேப்போல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 5-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே தாய் அக்குழந்தையை பரிதவிக்கவிட்டுச் சென்று விட, குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது தனியார் மருத்துவமனை நிர்வாகம். 

பெற்றோரின் ஆதரவின்றி விடப்பட்ட இரண்டு பிஞ்சு குழந்தைகளும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த இரு குழந்தைகளும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் கூறுகையில், 'இந்த வருடம் ஆதரவின்றி விடப்பட்ட 9 குழந்தைகளை கோவை அரசு மருத்துவமனை மீட்டுள்ளது. அதில் 6 குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகள் அவர்களின் தாய் தந்தையிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுவிட்டனர். 

ஆண்டு தோறும் இது போல் பச்சிளம் குழந்தைகளை அனாதைகளாக விட்டுச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன . கடந்த ஆண்டு 11 பச்சிளம் குழந்தைகள் ஆதரவின்றி விடப்பட்டன. இதில் பெரும்பாலானவை பெண் குழந்தைகள்.

ஆதரவற்ற, திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத ஆண்கள் இவ்வாறு பிஞ்சு குழந்தைகளை அனாதைகளாக விட்டுச் சென்றுவிடுகின்றனர். இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று' என்று அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...