ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் மனுதாரர்கள் அவதி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இதில், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், ஜி.என்.மில்ஸ், தொண்டாமுத்தூர் மற்றும் நகர்புறங்களில் இருப்பவர்கள் நேரில் வந்து குறைகள் அடங்கிய மனுக்களை அளித்து வருகின்றனர்.

வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு நாளில் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக, இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்த போதிய வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், தங்களது வாகனங்களை, ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்த வேண்டிய நிலையில் மனுதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ரயில்நிலையம், அவினாசி சாலை செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெருக்கடியால் சிரமம் அடைகின்றனர். 



எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மனுதாரர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் தகுந்த வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மனுதாரர் ஒருவர் கூறுகையில், ” வாரந்தோறும் திங்கட்கிழமை இந்தப் பிரச்சனையை சந்திக்கிறேன். ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே  மற்றும் வெளிப்புற பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தகம் நிரம்பி வழிகிறது. வாகனங்களை நிறுத்த முறையான நிறுத்துமிடம் ஏதுமில்லாமல்  மிகவும் சிரமமாக உள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 



இது பற்றி சமூக ஆர்வலர் ஆரோக்யராஜ் பேசுகையில், பணியாளர்களின் வாகனங்கள் மட்டுமே உள்ளே  நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர்கள் நிறுத்த சிறிது இடமே ஒதுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முறையான இடத்தை வாகன நிறுத்தத்திற்கு ஒதுக்க வேண்டும். பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளன. எனவே, அதனை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...