வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகள் வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் பன்னிமேடு அருகே உள்ள சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த நான்கு பங்களாக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கட்டில், பீரோ ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் நேற்று இரவு நல்லமுடி பகுதியில் வனத்துறை பயிற்சி மையத்தின் நான்கு சுவர்களையும் இடித்து அங்கிருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது. 



பின், சம்பவ இடத்தில் திரண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டும், தீப்பந்தங்களைக் கொண்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் குடியிருப்புகளுக்குள் நுழையலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...