கோவையில் கடைபிடிக்கப்பட்ட காவலர் வீர வணக்க நாள் - 72 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி சீன ராணுவத்துடனான போரின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்தனர்.



அவ்வாறு போரின் போதும், கலவரங்களின் போதும் உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாக கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 21-ம் நாள் காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள காவலர்கள் காவலர் வீர வணக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த காவலர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்து 72 குண்டுகளை  விண்ணில்  முழங்கி மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலியை உரித்தாக்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் லட்சுமி, பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...