கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி சீன ராணுவத்துடனான போரின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்தனர்.

அவ்வாறு போரின் போதும், கலவரங்களின் போதும் உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாக கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 21-ம் நாள் காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள காவலர்கள் காவலர் வீர வணக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த காவலர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்து 72 குண்டுகளை விண்ணில் முழங்கி மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலியை உரித்தாக்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் லட்சுமி, பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.