எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - எஸ்.ஏ.சி.ஓ.என் இயக்குநர் மறுப்பு

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு (எஸ்.ஏ.சி.ஓ.என்)  வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி, நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல, வெறும் வதந்தி என அதன் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பறவையியல் ஆராய்ச்சி மையத்திற்கு, ஆண்டுதோறும்  நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த தகவலை, எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்தின் இயக்குநர் சங்கர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எங்களது ஆராய்ச்சி மையமானது பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அவற்றிற்கு மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது. ஒருசில திட்டங்கள், மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் உள்ள முதன்மையான பறவையியல் ஆராய்ச்சி மையங்களில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையமும் ஒன்று. மொத்தம் 54.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையமானது ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு  அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...