இரட்டை இலை சின்னம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும் - துணை சபாநாயகர் தம்பிதுரை

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்று, அச்சின்னத்தை பெறுவது உறுதி என அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும்.

பெரும்பான்மையான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்குமென்பது உறுதி. இன்று நடைபெறும் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வெற்றி பெறும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவு அரசிற்கு உள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கம் செயல்படும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுகிறார் என்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, பதிலளிக்க  தம்பிதுரை மறுத்து விட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...