இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்று, அச்சின்னத்தை பெறுவது உறுதி என அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும்.
பெரும்பான்மையான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்குமென்பது உறுதி. இன்று நடைபெறும் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வெற்றி பெறும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவு அரசிற்கு உள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கம் செயல்படும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுகிறார் என்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, பதிலளிக்க தம்பிதுரை மறுத்து விட்டார்.