ரேசன் கடைகளில் விநியோகிக்கும் மஸ்தூர் எனப்படும் சிவப்பு நிற பருப்பை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜகநாதன் என்பவர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம், அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் மஸ்தூர் பருப்பை வாங்கி பயன்படுத்தி உள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக ஜகநாதன் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்தூர் பருப்பை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு, தற்போது ரேஷன் கடைகளில் அதனை விநியோகம் செய்து வருகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கிறது. மஸ்தூர் பருப்பு விநியோகிக்க கூடாது. இதனை வலியுறுத்தி சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுக்கு இந்த பருப்பை அனுப்ப உள்ளேன்.என்று கூறினார்.