சிரியன் ஆலயம் அருகே பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- பொது மக்கள் அவதி



கோவை மாவட்டம், ஆர்.எஸ். புரத்திற்கு அருகே அமைந்துள்ள சிரியன் சர்ச் பார்க் சாலையில் சாக்கடை குழாயில் சேதம் ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் வெளியேறிவருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வார்டு எண்: 25, தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிரியன் சர்ச் பகுதியில் இரண்டு சாக்கடைக் குழாய்கள் அமைக்க பட்டுள்ளன . ஒரு குழாயில், அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் எந்த சேதமுமில்லை. மற்றொரு குழாயில் ஆர்.எஸ். புரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.



இந்த குழாயிலேயே அதிகப்படியான அளவு நீர் வெளியேறுவதால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிவருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துன்னர்.

மேலும், "மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் தொடர்ந்து இந்த குழாயை சரிசெய்ய முயற்சி செய்துவந்தாலும் கடந்த ஏழு நாட்களாக இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து பெருமளவு கழிவுநீர் இந்த குழாய் வழியாக வெளியேற்றுவதே ஆகும்.



இதில், அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே மேற்குறிப்பிட்ட சாக்கடைக் குழாயில் நீரோட்டம் குறைந்து காணப்படுகிறது. எனவே, அந்த நேரத்தில் மட்டுமே மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் சாக்கடை குழாய்களுக்குள் இறங்கி அடைப்பை எடுக்க முயன்று வருகின்றனர். பிற நேரங்களில் பெருமளவு கழிவுநீர் வடிவதால் துப்புரவுத் தொழிலாளர்களால் சாக்கடை குழாய்களில் இறங்க முடிவதில்லை.

"பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் வடிகால்கள் வேறு வழியில் மாற்றி அமைக்கப்பட்டால் தான் இந்த பிரச்சனை தீரும்" என்றார் அப்பகுதியில் வசிக்கும் சந்திரன்.

"குறிப்பாக, ஆற்றுநீரைப் போல கழிவுநீரானது சாலையில் அதிகளவில் ஓடிவருவதால் அந்த சாலையினை கடப்பதே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தாய் மாறிவருகிறது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகளவுள்ளது ஏற்பட்டுள்ளது" என்று எச்சரித்தார் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்.

பருவ மழை பெய்யத் தொடங்க யிருக்கும் இந்த சூழலில் மேலும் தாமதிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த கழிவுநீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...