வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நில வேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு

கோவை மாவட்டம், வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் நில வேம்பு கசாயத்தை வால்பாறை நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வழங்கினார். 



தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம், வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமலிருக்க நிலவேம்பு கசாயம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

வால்பாறை வட்ட சட்டப்பணிக்குழு மற்றும் அரசு ஆரம்ப சுகாதா நிலையம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?.. டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது,  டெங்கு காய்ச்சலை பரவாமல் எப்படி தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறி அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். 



வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைய வட்டார மருத்துவர் பிரவீன், மருத்துவர் வித்யா மற்றும் அரசு அதிகாரிகளும், வால்பாறை வட்ட சட்டப்பணிக்குழுவினரும் உடனிருந்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...