நவ.3 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருகிற நவம்பர் 3ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயணடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பல்வேலு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுநாள் வரையிலும் கிடைக்கப்பெறமால் இருப்பின் இதுகுறித்து தங்கள் குறைகள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் மனுக்களை இரட்டை பிரதிகளில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு 20.11.2017-க்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான ஓய்வூதிய குறைதீர்ப்பு நாள் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற நவம்பர் 3 அன்று வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை ஓய்வூதிய இயக்குநர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முகக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓய்வூதிய குறை குறித்து மனு அனுப்ப வேண்டிய மாதிரிப் படிவம்

1. பெயர் மற்றும் முகவரி.

2. பி.பி.ஓ. எண்.

3. ஓய்வு பெற்ற நாள்.

4. கடைசியாக விகித்த பதவி மற்றும் துறை.

5. குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.

6. முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் (சுநகநசநnஉந)

7. இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடாந்திருந்தால் அதன் விவரம்.

8. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விபரம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...