கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேசத்திற்கு மாற்றும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேச மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை உத்திர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வமைப்பின் பொருளாளர் பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிறைநுதல் செல்வி கூறுகையில், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை தடுக்காமல் தமிழக அரசு மத்திய அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. 

அரசு அச்சகத்தை இடமாற்றும் முடிவை கைவிட வேண்டும். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு பிறைநுதல் செல்வி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...