செயற்கை பஞ்சு நூலின் மீதான வரியினை குறைத்துள்ளது ஜவுளித்துறைக்கு பயனளிக்கும்- சைமா

செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீது 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் துணிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளீட்டு வரி எடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செயற்கை பஞ்சு மற்றும் நூல் தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, செயற்கை பஞ்சு நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சைமா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே, தற்போது செயற்கை பஞ்சு நூலின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு சைமா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக செயற்கை நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது 22-வது கூட்டத்தில் அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு உலகளவில் நமது ஜவுளி உற்பத்தி பொருட்கள் போட்டியிட வசதி செய்யும். மேலும், ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் துணி கிடைக்கும் என்று சைமா தலைவர் பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...