நீலகிரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் துவக்கம்


நீலகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முகாம் அக்டோபர் 3ம் தேதியன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.

வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் இன்று (அக்டோபர் 8) மற்றும் அக்டோபர் 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மேற்பார்வையிட சமூக பாதுகாப்பு ஆணையர் லால்வேனா அவர்களை நீலகிரி மாவட்ட தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.



இம்முகாம்களில் நீலகிரிக்கு உட்பட்ட வாக்காளர்கள் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி பயனடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



இதனைத்தொடர்ந்து, இன்று (அக்டோபர் 8) குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜே.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...