ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்.,07) மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, காந்தி லேஅவுட் பகுதியில் உள்ள 10 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 பாரத்நகர் பகுதியில் உள்ள 15 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 25 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது. 

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மிட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினருக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...