கேரளாவில் பிறந்த பி.ஜி. தினேஷ், திருசூரில் உள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் பயன்று முடித்தார். இதன் மூலும் நையாண்டி, நகைச்சுவை போன்ற ஓவியக் கலையுணர்வுகளில் சிறந்து விளங்கினார். சிறு வயது முதலே உணர்வுபூர்வமான ஓவியங்களை வரைவதில் தினேஷ் கைதேர்ந்து காணப்பட்டார்.

மரச்சாமான்களில் சிற்பம் வடிப்பது, விலங்குகளை தத்ரூபமாக வரைவது போன்ற அவரது திறமைகளை மக்களிடையே வெளிக்கொண்டு வரும் வகையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜென்னி ரெசிடென்சியில் வரும் 19-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில், பி.ஜி. தினேஷ் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஓவியப்பிரியர்கள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஓவியர் தினேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஓவியங்களும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் என நம்புகிறேன். இந்தப் படங்கள் எனது சிறுவயதை நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.