தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவின் அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியதாக வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு, பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் அரசு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.