நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா டெங்கு பரவாமல் பாதுகாக்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, இன்று குன்னூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயகுமார் தலைமையில் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், சுற்றுலா சிற்றுந்து வாகன ஓட்டுனர்கள், வியாபரிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழக செயலாளர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முகமது சலீம், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்றம் குன்னூர் தலைவர் ஜெபரத்தினம், அரசு மருத்துவர் ஷீலா, எக்ஸ்னோரா அமைப்பின் மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.