ராஜா கழுகுகளின் வரவால் அழகு கூடும் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கிராமம் பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் உள்ளது. இதனையொட்டி, கோவை வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்கின்றன. 

தற்போது, பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தின் ஜுரோ பாயிண்ட் பகுதியில் சிவப்பு நிற தலையை கொண்ட ராஜா கழுகுகள் வருகை தந்துள்ளன. அதனை, பொதுப்பணித்துறையின் உதவி நிர்வாக பொறியாளர் நிதியன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில், ராஜா கழுகுகள், இறந்த மானின் உடலை  தின்று கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. 

கழுகுகளின் வருகையால் வளமான வனப்பகுதியை குறிக்கும் என்ற நிலையில், சுற்றுவட்டாரப்பகுதியான சத்தியமங்கலத்தின் மோயர் பள்ளத்தாக்கு, புலிகள் சரணாலயம் மற்றும் பிற பகுதிகளிலும் இவைகள் பெரிதும் காணப்படுகின்றன. மனிதர்களின் ஆதிக்கம் இல்லாத இந்த பகுதியில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வரத்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 

பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தில் தண்ணீரின் அளவால் இயற்கை எழிலகு பொழிந்து காணப்படும் வேளையில், வன விலங்குகளின் வருகையும் அதிகரிக்கிறது. ஏற்கனவே, யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, மற்றும் செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வந்த வண்ணம் உள்ளன. 

பல்வேறு விலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் ராஜா கழுகுகளும் முகாமிட்டுள்ளதால்,  பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் பகுதியை விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...