இந்திய உணவுக் கிடங்கால் அதிகரிக்கும் செல்லுப் பூச்சிகள் - நடவடிக்கை கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கிடங்கினால் செல்லுப் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் இந்திய உணவுக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. 1982- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கிடங்கானாது 82 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டது.

இதனிடையே, இந்த உணவுக் கிடங்கில் சமீபகாலமாக முறையான பராமரிப்பின்றி செல்லுப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பூச்சிகள் அருகாமையில் உள்ள ஸ்ரீராம்நகர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பரவி வருகிறது.

எனவே, இந்திய உணவுக் கிடங்கு மேலாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும், உடனடியாக அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...