கோவையில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் மகாத்மாக காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூக தணிக்கை மேள்கொள்வது குறித்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்திலுள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பாளையம், சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2016- 17ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் அக்டோபர் 11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...