வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக கணினி பதிவேற்றுநர் வேலைவாய்ப்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டத்தின்கீழ் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த தற்காலிக கணினி பதிவேற்றுநர் பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் 7500 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். 

மேலும், வேலைவாய்ப்பகம் பரிந்துரை செய்யும் நபர்களைத்தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுள்ள நபர்கள் வயது சான்று, கல்விச் சான்று ஆகியவற்றுடன் உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை - 18 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சியுடன் கணினி இயக்குவதற்குரிய அடிப்படை அறிவு பெற்ற பெண் பாலினத்தவர் மட்டுமே தகுதியுடையோர். 1.7.2017 அன்று 32 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 

கடைசி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...