அக்.,6-ம் தேதி திருமணமான பெண்களுக்கான ”கர்வா சவுத் 2017” விழா


வட இந்தியாவில் திருமணமான இந்து பெண்கள் கொண்டாடும் "கர்வா சவுத்" விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் திருமணமான பெண்கள், தங்களது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். திருமணமான பெண்கள் ஒரு மணமகள் போல ஆடை அணிந்து, வளையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பொட்டு வைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான "கர்வா சவுத்" விழா நாளை (அக்.,6) பாப்பிஸ் ஹோட்டலில் (Poppy's hotel) மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியினை அமிகோஸ் செயிம்பிரி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

"கர்வா சவுத்" விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் பேசுகையில்,  இந்த பெண்களுக்கான அழகுப் போட்டியல்ல. ஒவ்வொரு திருமணமான பெண்ணும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான மேடையாக இது உள்ளது. போட்டி பங்கேற்பாளர்கள் மேடையில் அணிவகுத்து வரும் போது,  அவர்களது உடல் வடிவமைப்பு, வயதுகளை பொருட்படுத்தாமல் அவர்களது ஆர்வம், நம்பிக்கை மற்றும் வெளிப்பாடு போன்றவை அடிப்படையாக கொண்டே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

"கர்வா சவுத்" விழாவில் திருமணமான பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...