கோவையில் போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து : மாநகர காவல்துறை அறிவிப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

வேகமாக வாகனங்களை இயக்குதல், சிக்னல்களை மதிக்காமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குதல்,  சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லுதல் போன்றவை வாகன விதிமீறல்களாகும்.  உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியானது, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 887 வழக்குகள் பதியப்பட்டு அதில் 16 ஆயிரத்து 574 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...